லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கு முக்கிய கதா பாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்த்த மன்சூர் அலிகானுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த மன்சூர் அலிகான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ படத்தில் தனக்கு பலாத்கார காட்சியை கிடைக்கவில்லை என முகம் சுளிக்கும் வகையில் பேசி உள்ளார். இதற்கு நடிகை திரிஷா கடன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது : பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் மோசமான பார்வை என காட்டமாக விமர்சித்தார். மேலும் இது போன்ற நபருடன் நடிக்காததற்கு தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இனியும் அவருடன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்றும் திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.