ரூ.2.5 கோடி மோசடி..!! நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் கைது..!!

குறைந்த விலையில் நகைகள் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்த நடிகர் சூர்யா வீட்டின் பணிப்பெண் கைது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவியுடன் மும்பை சென்று விட்டார். இந்நிலையில் அவரது வீட்டில் பணிப்பெண் திருடியதாக எழுந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது., அவரது வீட்டில் பாதுகாவலராக பணிபுரிந்து வருபவர் அந்தோணி ராஜ்., அவருக்கு சுலோச்சனா என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் அந்தோணி ஜார்ஜிடம் குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாகவும்., அதற்கு ரூ.5,500 செலுத்தினால் மட்டும் போதும் என்றும் 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய அந்தோணி ராஜூம்., சுலோச்சனாவின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும் சுலோச்சனாவிடம் வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.42 லட்சம் வரை கொடுத்துள்ளார். சில நாட்கள் கடந்த பின் அவர் தங்க நாணயங்களை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தோணி ஜார்ஜ், இது குறித்து சுலோஞ்சாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் முறையான பதில் அளிக்காததால் கடும் கோபமடைந்த, அந்தோணி இந்த மோசடி குறித்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

அதாவது அப்பெண் அந்தோணியிடம் மட்டுமின்றி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது, மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோரும் கைது செய்யபட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News