பருத்திவீரன் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்..!

நடிகர் செவ்வாழை ராசு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து கந்தசாமி, மைனா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

70 வயதாகும் செவ்வாழை ராசுவுக்கு 3 மகன்கள் உள்ளனர். செவ்வாழை ராசுவுவின் உடல் தேனி மாவட்டம் கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

RELATED ARTICLES

Recent News