லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் வேறு ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த மன்சூர் அலிகானிடம் விஜய்யின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நாட்டில் எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு… மக்கள் அரசியல் ரீதியாக பின் தங்கி உள்ளார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இது தேவையா என பதிலளித்துள்ளார்.