பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா தெலுங்கு திரைப்படம் இன்று தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திரைக்கு வந்துள்ளது.
தங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தை கொண்டாடும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஹைதராபாத்தில் அந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள சுதர்சன் தியேட்டர் அருகே ஜூனியர் என்டிஆர் க்கு 40 அடி உயர கட்டவுட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்தக் கட்டவுட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த காரணத்தால் அது முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இதனால் அங்கு திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். மோதல் ஏற்படாது தவிர்க்கும் வகையில் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.