எம்ஜிஆர் நடிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் எம்ஜிஆரின் சகோதரராக சந்திரமோகன் நடித்திருந்தார். இவர், மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் ஆவார்.
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த இவர் இரண்டு நந்தி விருதுகள், ஒரு ஃபிலிம்ஃபேர் விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் இதயநோய் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
சந்திரமோகனின் இறுதிச்சடங்கு வரும் திங்கள்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.