கல்லீரல் பாதிப்பு காரணமாக நடிகர் பாலா நேற்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பாலாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் பாலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாவின் உடல்நிலை குறித்து அறிந்த இயக்குநர் சிறுத்தை சிவா, அவரை காண மருத்துவமனைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.