கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கம் 3, பைரவா படங்கள் வெளியானபோது தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை வோட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News