உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆய்வாளர் உட்பட 3 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி சமூகநீதி மற்றும் மனித உரிமை ஆய்வாளர் இளவரசன் (52), புள்ளியல் துறை இளையராஜா ஆகியோர் விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர், இந்த காரை சீதாராமன் என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார் இந்த கார் ஆனது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் பயணம் செய்த சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆய்வாளர் இளவரசன் (52) புள்ளியல் துறை ஆய்வாளர் இளையராஜா மற்றும் ஓட்டுநர் என மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்திய பின்பு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.