நண்பரின் திருமண விழாவில் பரிசு அளிக்கும் போது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தில் நண்பரின் திருமண விழாவில் பரிசு வழங்கும்போது வம்சி என்ற இளைஞருக்கு மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக வம்சியை அவரது நண்பர்கள் மீட்டு டோன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.