மருத்துவமனை ICU வில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின், 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ICU வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மருத்துவ உதவியாளர் சிராக் யாதவ் என்ற நபர் சிகிச்சையில் இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் கூச்சலிட முயன்றபோது அவருக்கு சிராக் யாதவ் மயக்க ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்ணின் குடும்பத்தார் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மருத்துவ உதவியாளர் சிராக் யாதவ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News