ஒரே ஒரு வீடியோ கால்..!! காதல் மனைவியை ஏமாற்றிய காதலன் கைது..!!

சென்னை புழல் கங்காதரன் தெருவை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் தன்னுடன் பயின்று வந்த எபினேஷ் என்ற மாணவரை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் வீட்டில் தெரியவர பல எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்..

புதுமண வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கிய கெளசல்யாவிற்கு அதன் பின்னரே அடுத்தடுத்த அதிர்ச்சி காத்து கிடந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் எபிநேசர் ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். இதை பார்த்த கௌசல்யா யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு எபினேசர் அந்த பெண் தனது அத்தை பெண் என்றும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் கட்டாய திருமணம் நடைபெற்று, மூன்று மாதத்தில் ஒரு கைக்குழந்தை இருப்பதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கௌசல்யா, காதல் கணவனிடம் சண்டையிட்டு., பெற்றோர் உதவியுடன் புழல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் எபினேசர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

RELATED ARTICLES

Recent News