தென்காசி அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் உடன் சேர்ந்த மனைவி கொலை செய்த சம்பவம், அரங்கேறியுள்ளது.
தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் பகுதியை சேர்ந்த வேல்துரை, நேற்று முன்தினம் வழக்கம் போல், பணிக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென வந்த கார், அவரை மோதிவிட்டு, அங்கு நிற்காமல் சென்றுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருந்ததால், அவரது மனைவியே, காதலனின் உதவியுடன், காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள், காதலன் சுதாகர், காரை ஓட்டிய ஆறுமுகம் ஆகிய 3 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.