விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் திவ்யா.இவா் , கடந்த 31.05.2022 அன்று பண்ருட்டி விநாயகா டிரேடர்ஸ் என்ற கடையில் அப்பளம் வாங்கியுள்ளார். அது காலாவதியான அப்பளம் என தெரியவந்ததை அடுத்து கடைக்காரரிடம் இதுதொடர்பாக முறையிட்டுள்ளார். ஆனால், கடையின் உரிமையாளர் அலட்சியமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த திவ்யா, விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி சதீஷ்குமார், காலாவதியான அப்பளம் விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ₹25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.