ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியின் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போதே பேர் அதிர்ச்சி காத்திருந்தது..
அதாவது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..