“மதமென பிறந்தது போதும்..” இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றுக்கூடிய கோவில் திருவிழா..!!

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றுகூடி கொண்டாடிய கோவில் திருவிழா

இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் பிறந்தநாளை மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் தஞ்சாவூரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்து பெண்களுடன் இஸ்லாமிய பெண்கள் இணைந்து தஞ்சை கீழவாசலில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நிசும்பசூதனி வடபத்திர காளியம்மன் கோவிலில் ஆவணி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு , ரோஸ்மில்க் , பாதாம்பால் , செவ்வாழைப்பழம் மற்றும் ஐஸ்க்ரீம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மதச்சார்பின்மை மற்றும் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமய வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த இறைப்பணியில் இஸ்லாமிய பெண்கள் தங்களையும் இணைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கியதை வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை கண்ட பக்தர்கள் பலரும் மத வேற்றுமை இல்லாமல் புன்னகையுடன் பழச்சாறு வாங்கி பருகிச்சென்றனர்.கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..

RELATED ARTICLES

Recent News