மதுரை தவெக மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை தவெக பெண் நிர்வாகி வெளியிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது விஜய் மேடையில் நடந்து வந்த போது அவருக்கு துண்டு அணிவிப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் மேலே ஏறி வந்தனர்.
ஆனால் அவர்களை பவுன்சர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்படி தூக்கி வீசப்பட்டத்தில் தான் காயம்பட்டதாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வசிக்கும் சரத்குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பவுன்சர்கள் மற்றும் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே தூக்கி வீசப்பட்டது சரத்குமார் அல்ல நான் தான் என்று விழுப்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் வீடியோ ஒன்று வெளியானது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை அம்பத்தூரை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி தேவி என்பவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தூக்கி வீசப்பட்டதாக புகார் அளித்த இளைஞர் விஜய் நடந்து வரும்போது தனக்கு முன்னாள் அமர்ந்திருப்பதாகவும், அவரை தூக்கி வீசியது பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது..