வேலூர் மாவட்டம் , ஓலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் மகள் பூவிகா( 12) இன்று காலை பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்
இந்நிலையில் அங்கு பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளது.இதனால் கதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த பூவிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதன்படி மாணவி சிகிச்சை பெற்று வருகிறார் . இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.