ஒன்றரை வயது குழந்தையை கவ்வி தூக்கிக்கொண்டு ஓடி கடித்துக் குதறிய தெரு நாய்..!

கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்வி தூக்கிக்கொண்டு ஓடி கடித்துக் குதறிய தெரு நாய். காப்பாற்றச் சென்ற பாட்டியையும் நாய் கடித்ததில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மேல்கொண்டாளி கிராமத்தை சேர்ந்தவர் அபுதாகிர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுல்தான் பீவி இவர்களுக்கு அஜ்மல் பாட்ஷா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது .

இந்நிலையில் சுல்தான் பீவியும் அவரது குழந்தை அஜ்மல் பாட்சா மற்றும் அவரது பாட்டி மல்லிகா பிவி மூன்று பேரும், மேல கொண்டாளி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுல்தான் பீவி, தனது ஒன்றரை வயது மகன் அஜ்மல் பாஷாவை பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். பாட்டி மல்லிகா பிவி கொல்லையில் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த தெரு நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்வி கொண்டு ஓடியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பாட்டி மல்லிகா பிவி ஓடிச்சென்று தெரு நாயை விரட்டினார்.

அப்போது குழந்தையை கீழே போட்டு விட்டு குழந்தையின் தலை கை கால் காது உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய் கடித்தது. மேலும் பாட்டி மல்லிகா பீவியையும் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடித்து காயப்படுத்தியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பாட்டியையும், பேரக்குழந்தையையும் காப்பாற்றி உள்ளனர். பின்னர் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அஜ்மல் பாஷாவும், பாட்டி மல்லிகா பிவியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அஜ்மல் பாஜாவுக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News