போதைப் பொருள் பயன்பாடு என்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சீனாவில் உள்ள சோங்கிங் பகுதி காவல்துறை, போதைப் பொருட்களை கண்டறிவதற்கு, அணில்களை பயன்படுத்தி வருகின்றனர். ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் வசிக்கும், சிவப்பு நிற அணில்களுக்கு, சிறப்பான மோப்ப சக்தி இருப்பதால், இந்த வகை பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

நாயை காட்டிலும் சிறிய அளவில் இருப்பதால், செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று, அணில்கள் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதால், இதன் பயன்பாடு, அங்கு அதிகரித்துள்ளது.