35 பேருக்காக மட்டும் பிரத்யேக வாக்குச்சாவடி! – தேர்தல் ஆணையம் முடிவு!

ராஜஸ்தானின் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர கிராமமான ’பட்மர் கா பார்’ பகுதியில் நவம்பர் 25 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

போக்குவரத்து வசதியில்லாத இந்த குக்கிராமத்தில் மொத்தம் 35 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். தேர்தல் காலங்களில் இவர்கள் அனைவரும் 20 கிமீ தொலைவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு நடந்தே செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் ஆண்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கின்றனர். தற்போது பெண்களும் வாக்களிக்கும் வகையில், அவர்களது கிராமத்திலேயே பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் மிகச்சிறிய வாக்குச்சாவடி என்ற சிறப்பையும் இந்த கிராமம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News