இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு – இரண்டு மணி நேரம் போராடி பிடித்த கல்லூரி மாணவன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அத்தியடிதட்டு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (37). இவர் குடும்பத்துடன் திருநெல்வேலி செல்வதற்காக புதிய இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் வந்துள்ளார்.

திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து குடும்பத்துடன் பேருந்தில் ஏறி சென்றார். இந்த நிலையில் லட்சுமணன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு வாகனத்தின் உள்பகுதிக்குள் சென்று விட்டது. இருசக்கர வாகனத்தின் சாவி இல்லாததால் வாகனத்தில் உதிரி பாகங்களை கழற்றி பாம்பை பிடிக்க முடியவில்லை. இதனால் பாம்பை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து இரு சக்கர வாகன மெக்கானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு வந்து இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை கழற்றினார். அப்போது பாம்பானது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டிக்குள் இருந்த பாம்பை கல்லூரி மாணவன் ஐசக் ராயன் லாவகமாக பிடித்தார்.

இதனையடுத்து அந்தப் பாம்பை தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த பாம்பானது கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்தது என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News