“கண்ணே கலை மானே..” முத்தையா டூ கவிஞர் கண்ணதாசன்..! வாழ்வியல் கதை..!!

தமிழ் திரை உலகின் பாடலாசிரியரும் கவிஞருமாக பலரின் மனதிலும் இடம் பெற்றிருப்பவர் “கண்ணதாசன்”. இன்று அவரது 99வது பிறந்தநாள் ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுவரையில் இவர், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

காரைக்குடி மாவட்டம் சிறுகூடல்பட்டி கிராமத்தில் முத்தையாவாக பிறந்தவர் தான் கண்ணதாசன். தந்தைக்கு பத்தாவது மகனாக பிறந்த இவர் அந்த காலத்திலேயே குடும்ப வறுமை காரணமாக 10 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக தத்து கொடுக்கப்பட்டார்.

பின்னர் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தனது 16வது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் 1943ம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் எஜாக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து., பத்திரிக்கை ஆசிரியராக பணியை தொடங்கிய போது கண்ணதாசன் என பெயரை மாற்றிக்கொண்டார். ஆரம்பகால திராவிட இயக்கத்தின் ஆதரவாளராகவும் பின்னர் காங்கிரஸின் ஆதரவாளராகவும் இருந்தார்.

பின்னர் 1949ம் ஆண்டு கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் “கலங்காத்திரு மனமே” என்ற பாடலை எழுதினார். அதன் பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பலர் படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதுவரையில் இவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மறைந்த, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகிய 4 முதலமைச்சர்களுடன் பயணித்த பெருமை இவரையே சேரும்..

கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் :

பெரும்பாலும் இவரது பாடல்கள் பல அர்த்தங்களை கொண்டுள்ள பாடலாக தான் இருக்குமே தவிர ஒரு போதும்., பிறரை திட்டி தீர்க்கும் வகையில் பாடல்கள் இருக்காது என ரசிகர்களால் சொல்லப்படுகிறது..

“எங்கே வாழ்க்கை தொடங்கும்.. அது எங்கே எவ்விதம் முடியும்..
இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது..!

நான் வாழ்க்கையை ஒரு பயணம் போன்றது அதில் நாம் ஆரம்பத்தில் தொடங்கும் வாழ்க்கை நாம் நினைத்தது போலவே செல்வதில்லை., இதுதான் வாழ்க்கை என்று நாம் பயணித்து கொண்டிருக்க அந்த பயணம் முடிந்து விடுகிறது., அதாவது நம் வாழ்க்கையே முடிந்து விடுகிறது என எழுதியுள்ளார்.

பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு ஒன்று கேட்டது., கருடா சவுக்கியா மா என. அதற்கு கருடனும் யாவும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டார்கள் என்றால் எல்லோரும் நலமே என்று சொன்னது.

“மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது” என்று இவர் பாடிய பாடலில் “மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்று ஒளவையார் கூறியதை குறிப்பிட்டு., ஒருவர் நம்மை மதிக்க வில்லை என்றால் அவரின் வீட்டு வாசலை கூட மிதிக்க கூடாது என்பதே பொருள்..

சரி வாழ்க்கைக்கான தத்துவத்தை தான் இவர் பாடலாக படியிருக்கிறாரா என்றால்..? காதல் பாடல்களும் எழுதியுள்ளார்.

கமல்ஹாசன்., ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த மூன்றாம் பிறை படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி…

உன் மீது காதலையும் வைத்தேன்., அதனோடு பல கனவுகளையும் வளர்த்து கொண்டேன்., என் கண்ணின் மணி போல நான் உனை பார்க்கிறேன்., உனக்கே உயிராகி நான் நிற்கிறேன் பிரிந்து விடாதே நான் இறந்து விடுவேன் என ஒரு காதலன் தன்னுடைய குழந்தை மனம் கொண்ட காதலிக்காக பாடிய பாடல்கள் தான் இவை..

இதுவரையில் இவர் 5 ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ள நிலையில் பாடல்கள் எழுதும் போது மது அருந்தி கொண்டே தான் எழுதுவார் என சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News