அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சின்னக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது 14). இவர் சிங்கம்பேட்டையில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோடை விடுமுறை என்பதால் கீர்த்தனா வீட்டில் இருந்து அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவருடைய தாய் கலாமணி பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் செல்போனை கீழே போட்டு உடைத்து விட்டார். பின்னர் தனது தாயிடம் புதிய செல்போன் வாங்கி தர வேண்டும் என்று கூறி தொந்தரவு செய்துள்ளார்.
இதற்கு கீர்த்தனாவின் தாய் கடுமையாக திட்டியதால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.