ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மதுபோதையில் நன்பர்களுடன் சேர்ந்து காரில் சென்ற நபர் மீது தாக்குதல்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மதுபோதையில் நன்பர்களுடன் சேர்ந்து மனைவியுடன் காரில் சென்ற நபர் மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் இன்று மாலை 5:30 மணியளவில் பட்டினப்பக்கம் சந்திப்பு வழியாக தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பட்டினப்பாக்கம் சந்திப்பில் முன்னாள் சென்ற காருடன் வழி விடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது முன்னாள் சென்ற ஷிப்ட் காரில் நான்கு நபர்கள் இறங்கி மணிமாறனை அவரது மனைவி முன்பாக தாக்கி உள்ளனர்.

அருகில் இருந்த போக்குவரத்து காவலர் சென்று தடுத்தபோது தான் காவல்துறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறிப்பாக மணிமாறனின் சட்டையை கிழித்து சாலையில் துரத்தி தாக்கும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TN03 AE 9972 என்ற வாகன எண் கொண்ட வாகனத்தில் இருந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் எனக் கூறி தன்னை தாக்கிய நபர் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க மணிமாறன் அளித்த புகார் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிமாறனை தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News