இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவர், சமீபத்தில் தனது மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்து, அவரது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என்னை மன்னிப்பாயா? என்று யாரிடமாவது கேட்க வேண்டும் என்றால், யாரிடம் கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், “மன்னிப்பாயா என்று அனைவரிடமும் தான் கேட்க வேண்டும்” என்றும், “முக்கியமாக என் மகன், மகள், முன்னாள் மனைவி ஆகியோரிடம், மன்னிப்பாயா எனக் கேட்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.