மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்…மோடிக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்

குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள் என்ற வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்களை பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை, போலீசாருக்கு பாஜக மீதுள்ள பயத்தைக் காட்டுகிறது என குஜராத் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் இசுதன் காத்வி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், பிரதமரைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் டெல்லியில் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

RELATED ARTICLES

Recent News