தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கிய நபர்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தொடர்மழை காரணமாக ஓடைகள், ஆறுகள் ஆகியவற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத் ஓடுகிறது.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள முப்பல் கிராமம் அருகே உள்ள ஓடை மீது போடப்பட்டிருக்கும் தரைப்பாலத்தின் மீது மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அந்த பாலத்தை மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள்களுடன் மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். அவரை மீட்பதற்கான முயற்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தரைப்பாலத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞரை மழை வெள்ளம் இழுத்து சென்றது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News