பிரமாண்ட கப்பலை இரண்டு துண்டாக உடைத்த ராட்சச சுறா..! வைரல் வீடியோ..!

வளர்ந்து வரும் இணைய உலகில், தினம் ஒரு வேடிக்கை மனிதர்களையும், வியக்க வைக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக கற்பனைக்கு அளவில்லாத வகையில் பிரமிக்கவைக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

அதில் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்வாழ்ந்த, மெகாலோடன் எனப்படும் மிகப்பெரிய சுறா அருகிலிருந்த பிரம்மண்ட கப்பலையும் உடைத்து நாசம் செய்கிறது. மேலும் கடலின் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிக்காப்டரையும் சிதைத்து விடுகிறது. ஆனால் இதல்லாம் நிஜத்தில் நடந்தவை இல்லை என்றால் நம்புவீர்களா?

ஆம் அதான் உண்மை..! அலெக்ஸி என்ற வரைகலை நிபுணர், தனது அசாத்திய திறமையால் இந்த வீடியோவை அனிமேஷன் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News