இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்கு பிறகு, ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன், பல படங்களில் இணைந்து நடித்தார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து அசத்திய இவர், நடிகர் திலகம் என்ற படத்திற்காக, தேசிய விருதும் பெற்றிருந்தார். இந்நிலையில், இவர், தனது நீண்ட நாள் காதலரை, தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளார். கோவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விஜய், த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் கலந்துக் கொண்டனர்.
இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தொடர்பான புதிய தகவல் ஒன்று, இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, திருமணத்திற்கு பிறகு, சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகலாம் என்று, அவர் முடிவு செய்துள்ளாராம். மேலும், திரைப்பட தயாரிப்பு, கணவரின் பிசினஸை மேலான்மை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம்.
இந்த தகவல், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக, நடிகை கீர்த்தி சுரேஷ் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.