ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள புதிய சேனம் பட்டிலா கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. 19 வயதாகும் இவர், தனது தாயுடன் வசித்து வந்தார். கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்த கீர்த்தியின் தாய், அந்த கிராமத்தில் இருந்த பல்வேறு ஆண்களுடன், கள்ள உறவில் இருந்து வந்தார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்க ஆளான கீர்த்தி, தவறான நடவடிக்கையை கைவிடும்படி, தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், தனது தாய்க்கு தகுந்த பாடம் புகுட்ட நினைத்த கீர்த்தி, வீட்டில் இருந்த பீரோவுக்கு தீ வைத்துள்ளார்.
அப்போது, அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் பற்றி எரிந்துள்ளன. ஆனால், இதனை தவறாக புரிந்துக் கொண்ட கீா்த்தியின் தாய், தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துவிட்டதாக மூட நம்பிக்கையுடன் இருந்துள்ளார். இதேபோல், ஒரு நாள் கீர்த்தியின் தாய் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், தீ பற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவத்தையும், கீா்த்தி தான் செய்துள்ளார். ஆனால், அதையும் பில்லி சூனியம் என்று அவரது தாய் நம்பியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கீர்த்தி, தனது வீட்டிற்கும், தன்னுடைய தாய் பழகிய ஆண்களின் வீட்டிற்கும் தீ வைத்துள்ளார். அப்போது, தங்களது கிராமத்திற்கே யாரே சூனியம் வைத்துவிட்டதாக, அந்த கிராம மக்கள் அறியாமையில் கிடந்துள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து நடந்து வந்ததால், காவல்துறையினர் கவனத்திற்கு இந்த சம்பவம் சென்றுள்ளது. அவர்கள் வழக்கு பதிவு செய்து, கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், கீர்த்தியிடமும் விசாரணை நடத்தியதில், அவர் தான் இந்த செயல்கள் அனைத்திற்கும் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.