நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள் தலைவர் விஜய்க்கு எம்.பி கமல்ஹாசன் விமர்சனம்
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இன்றயை தினம் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் உடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாட்டின் உயரிய திரைப்பட விருதான “தாதா சாகேப் பால்கே விருது” மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது என்றும் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
தனக்கு அந்த விருது கிடைக்கவில்லை என யாரும் ஆதங்கம் படக்கூடாது. நிறைய திறமையானவர்கள் அந்த வரிசையில் நிற்க வேண்டும் என கூறினார்.
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல்வாதியாக பார்க்காமல் சினிமா நடிகராக பார்த்தால் கூட்டம் வரதான் செய்யும், என்னையும் ரசிகர்கள் ஏன் தேடி வந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
சினிமாவுக்கு ஒருவர் புதிதாக வரும் போது நன்றாக நடி என்பார்கள்., இல்லையா இவனெல்லாம் எப்படி நடிகராக வரப் போறான் என விமர்சனைங்கள் முன் வைப்பார்கள்.
அப்படி தான் அரசியலிலும்., நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இந்த கூட்டம் ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவருக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும், இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பொருந்தும் எனவும் கூட்டம் சேர்ந்து விட்டால் அது எல்லாம் ஓட்டாக மாறாது என விமர்சித்தார்.