தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற திரைப்படத்தை, தயாரிப்பாளர் சமீர் அலிகான் தயாரித்து வந்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைக்க, சாம் சி.எஸ். ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அவருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த படத்திற்கு இதுவரை அவர் இசையமைத்து கொடுக்கவில்லை என்று, தயாரிப்பாளர் சமீர் அலிகான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தான் வழங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை, மீட்டுத் தரும்படி, கோயம்பேடு காவல்நிலையத்தில், அவர் புகாரும் அளித்துள்ளார்.