90s காலகட்டத்தில் விஜய் – அஜித்க்கு அடுத்தபடியாக இருந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். ரொமான்டிக் ஹீரோ என்றால் கமலுக்கு அடுத்தபடி இவர்தான் என பேசப்பட்டது.
உலக அழகி ஐஸ்வர்யாராய் உட்பட பல முன்னணி கதாநாயகிகளுடன் பிரசாந்த் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அந்தஸ்தை கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த் திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனார். அதற்கு காரணம் அவருடைய திருமணம்.

பிரஷாந்த்திற்கு கடந்த 2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரஷாந்த் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் பிரஷாந்த் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்தது.

இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு பிரஷாந்த் கிரகலட்சுமியை விவாகரத்து செய்தார். இதனால் பிரஷாந்தின் குடும்பம் மனமுடைந்து போனது. இதன் காரணமாக பிரஷாந்தால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
அவருடைய இந்த திருமணம்தான் பிரஷாந்தின் சினிமா வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது.