ஆவடி அருகே மதுபோதையில் தரைப்பாலத்தில் தவறி விழுந்த நபர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (43), இவர் கடந்த ஓராண்டாக குடும்பத்துடன் சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமம், பாலாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கொத்தனர் வேலை செய்து வந்துள்ளார்.

மது பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று மாலை திருநின்றவூர் அடுத்த பாக்கம், நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்தியுள்ளார். மேலும் அளவுக்கு அதிக போதையில் மதுபான கடை அருகே இருந்த தரைப்பாலத்தில் தவறி விழுந்து, கழிவுநீர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் சென்ற பொது மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் இறந்த நிலையில் இருந்த உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு விருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News