வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட சோலை நகர் பகுதியில் திருநாவுக்கரசு (வயது 74 )என்பவர் பசு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஞானகிரி என்பவருடைய விவசாய நிலத்தில் ஒன்பது மாத சினை பசுமாடு மேய்ச்சலில் இருந்த பொழுது,அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது குறித்து மின்துறை ஊழியர்கள் மற்றும் குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேச்சலில் இருந்த 9 மாத சினைபசு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.