மதுரை மாவட்டம் மேலூர் பெரியகடை வீதி பகுதியில் உள்ள தக்க தெருவை சேர்ந்தவர் மும்தாஸ், இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் தனது மகள்களுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டின் மேற்கூரையில் பாம்பு இருப்பதை அறிந்து அச்சமடைந்து அலறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பார்த்து விட்டு இதுகுறித்து மேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையில், வீரர்கள் வீட்டில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி 5 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பை பத்திரமாக பிடித்தனர். தொடர்ந்து, பிடிபட்ட பாம்பை பாதுகாப்பாக அருகில் உள்ள மலம்பட்டி மலை பகுதியில் விட்டனர்.
பெண்கள் தனியாக இருந்த வீட்டில் பாம்பு பிடிபட்டது. அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது