வெளியே சொன்ன உன் அப்பா அம்மாவை தூக்கிருவேன்….13 வயது சிறுமிக்கு பல முறை பாலியல் வன்கொடுமை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கொல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவன் முனியாண்டி(37). இவர் காய்கறி அங்காடியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரும், இவரது நண்பர் சந்திரன் என்பவரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது..

பாலியல் வன்புணர்வு செய்ததோடு இல்லாமல் சிறுமியிடம், இதை நீ வெளியே சொன்னால் உன்னுடைய அம்மா அப்பாவை தூக்கி விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பிறகு வீட்டில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கவனித்த அவரது பெற்றோர்கள் சிறுமியிடம் தீவிரமாக விசாரித்தபோது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முனியாண்டி மற்றும் சந்திரன் ஆகிய இருவரையுமே கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News