13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சிறுமியின் பெரியப்பா கைது..!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஞ்சரமேடு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 27ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, சிறுமியை வழிமறித்த வாசுதேவன், சிவக்குமார் மோகன் ஆகியோர் சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதனால் சிறுமி பயந்து இருந்த நிலையில் மறுநாளும் அதே போன்று சிறுமியை மிரட்டி சிவக்குமார் வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இரண்டு நாட்களாக சிறுமி சோர்வடைந்த நிலையில் இருப்பது கண்டு அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, வாசுதேவன், சிவக்குமார், மோகன் ஆகியோர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும், சிறுமியின் பெரியப்பா( சிறுமியின் தந்தையின் அண்ணன்) பச்சையப்பன் என்கிற குணசேகரன்(52) என்பவரும் கடந்த 3 மாத காலமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெரியப்பா குணசேகரன், வாசுதேவன் ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியின் பெரியப்பாவே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது, பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News