விவசாயிகளை அச்சுறுத்திய 10 அடி நீள மலைப்பாம்பு ! என்ன நடந்தது இதோ ?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை செல்லும் சாலையில் உள்ள வயல் வெளிகளில் நெல் நடவு செய்யப்பட்டு,விவசாயிகள் நீர் பாய்ச்சி வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் மழையின் போது மலைப் பகுதிகளில் இருந்த 10 அடி நீளம் மலைப்பாம்பு வயல்வெளிகளில் களை எடுக்கச் சென்ற விவசாய கூலித் தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்ததால் பணிகள் செய்ய முடியாத நிலை தொடா்ந்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள்கொடுத்த தகவலின் அடிப்படையில் நிலை அதிகாரி தர்மராஜ் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பு பிடிக்கும் கருவிகளை பயன்படுத்தி நெல் பயிர்களுக்கு நீர் செல்லும் வாய்க்காலில் பதுங்கி இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாபகமாக பிடித்தனர்.

இதனை அடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News