கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘பத்து தல’ படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

புதுச்சேரி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு ரசிகர் மன்ற சார்பில் பாலபிஷேகம் செய்தும், பத்து தேங்காய், பத்து பூசணிக்காய், ஆகியவை உடைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழியும் கொண்டாடினார்கள்.