தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் ரஜினிகாந்துடன் பாபா படத்தில் நடித்தார்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட மனிஷா அதிலிருந்து குணமாகி மீண்டும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாபா படம் என்னுடைய பெரிய பிளாப் படமாக இருந்தது. என்னுடைய மொத்த கேரியரை தொலைக்க காரணம் பாபா படம் தான்.தென்னிந்திய மொழிகளில் எனக்கு மார்க்கெட் சரிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.