திருவண்ணாமலைக்கு கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் அண்ணாமலையார் மலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான்கள், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
திருவண்ணாமலையில் உள்ள வியாபாரிகள் மீதமுள்ள தக்காளி மற்றும் காய்கனிகளை வனப்பகுதியில் போடுவதால் மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஓம் நகரில் நாய் கடித்து ஒரு மான் உயிரிழந்தது. அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மானின் கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
வனப்பகுதியில் இருந்து மான்கள் அடிக்கடி வெளியே வருவதால் நாய்களிடம் உயிர் இழக்கும் சம்பவம் பக்தர்களுடைய பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை இழந்துள்ளது.