காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜ் தலைமையில் அந்த கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்ய முயன்றதால் காங்கிரஸ் கட்சியினர் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள ஓர் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.