“கோட்டா சீனிவாச ராவ் அகால மரணம்” – வீட்டிற்கு சென்ற காவல்துறைக்கு அதிர்ச்சி! என்ன நடந்தது?

விக்ரமின் சாமி, விஜயின் திருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அரசியலிலும் ஆர்வம் உள்ள இவர், பாஜகவில் இணைந்து, சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவர் அகால மரணம் அடைந்துவிட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த தகவல், அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கும், தெரியவந்ததுள்ளது.

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான இவர் உயிரிழந்துவிட்டால், அப்பகுதியில், ரசிகர்கள், பிரபலங்கள், இறுதி மரியாதை செலுத்துவதற்கு கூட்டமாக வருவார்கள். இதனால், காவலர்கள் தேவைப்படுவதால், 9 பேர் வேனில், கோட்டா சீனிவாச ராவ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு அவர் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அவர் தொடர்பாக பரவி வரும் வதந்தி குறித்து, காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர், தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்றும், உங்கள் அனைவரும் உகாதி வாழ்த்துக்கள் என்றும் கூறி, கோட்டா சீனிவாச ராவ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

RELATED ARTICLES

Recent News