ஆர்யா, பரத் நடிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில், உருவான திரைப்படம் பட்டியல். இந்த படத்தில், விஷ்ணு வர்தனின் தந்தையான சேகர் என்பவர், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
இதுமட்டுமின்றி, ராஜதந்திரம் என்ற திரைப்படத்தில், வில்லனாகவும் நடித்து, அசத்தியிருந்தார். இந்நிலையில், இவர், உடல்நலக்குறைவு காரணமாக, இன்று உயிரிழந்தார். இதனை அறிந்த திரையுலகினர், விஷ்ணு வர்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.