உலகம் முழுவதும் பைக் ரைடு செல்ல வேண்டும் என்பது அஜித்தின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. ஆனால், அந்த கனவை, ரசிகர்களுக்காக அஜித் விட்டுக் கொடுத்துள்ளார்.
அதாவது, ஏ.கே. 62 படத்தை விரைவில் முடித்துவிட்டு, தனது பைக் ரைடை தொடங்கலாம் என்ற முடிவில் அஜித் இருந்தார். இதன் காரணமாக, ஏ.கே. 62 படத்தின் பணிகள், மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும், கதையும் அரைகுறையாக ரெடியானதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத அஜித், எனக்காக படத்தின் பணிகளை விறுவிறுப்பாக செய்ய வேண்டாம். பொறுமையாகவே கதையை தயார் செய்து, சிறந்த படைப்பாக ரசிகர்கள் முன் காட்ட வேண்டும் என்ற முடிவை அஜித் எடுத்துள்ளாராம்.