சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த கவரப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அங்கே மின்சார ஒயர் லாரியின் மீது அறுந்து விழுந்ததில் திடீரென லாரி, தீ பற்றி எரிய தொடங்கியது இதனை கண்ட லாரி ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை விட்டு இறங்கி உயிர்த்தப்பினார்.

வாகனத்தின் மீது விழுந்த மின் கம்பி உரசியதில் வாகனத்தின் உள்ளே இருந்த இருசக்கர வாகனங்கள் மலமல என தீ பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தண்ணீரை பீச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வாகனத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.