நடிகர் சூர்யா ஏற்கனவே விமான நிறுவன அதிபர் கோபிநாத் அவர்களின், வாழ்க்கை குறித்து உருவான சூரரை போற்று படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் அள்ளி குவித்தது. இந்த நிலையில் இதேபோன்று மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கேரளவை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை குறித்த கதை என்றும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்திவிராஜ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பேன் இந்தியா படமாக தயாராகும் இப்படம், சூர்யா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.