கொரிய தீபகற்பத்தை மையமாகக் கொண்டு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் நீண்டகாலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக வடகொரியா ஒரே நாளில் 4 தொலைதூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் வட கொரியாவில் உணவு நிலைமை மோசமடைந்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அவசர ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளார்.
1990 களின் பஞ்சத்திற்குப் பின் தற்போது மிக மோசமான உணவுப் பஞ்சம் வட கொரியாவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வடகொரிய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுவருகிறார்கள் என ஐ.நா சபையின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
சாப்பாட்டிற்கே வழியில்லாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஏவுகணை சோதனை அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.